வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம்
Wanahapuwa Educational Development Association (WEDA)
வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜனாப் D.M தெளபிக் (G.S) தலைமையில்யிருந்த மஸ்ஜித் நிருவாகக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய, நிர்வாக சபைஏற்பாட்டில், ஹாஜியானி நாகூர் உம்மா காதர் (முன்னாள் அதிபர், சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
சங்கத்தின் தூர நோக்காக “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்பதும், அதன் நோக்கக்கூற்றாக “பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு, ஆழமான ஆன்மீக உணர்வு, வாசிப்பை நேசித்தல், அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு, திறன் விருத்தியும் ஊக்குவிப்பும்” என்பன அமைந்தன.
சங்கத்தின் செயற்றிட்டங்களாக
- பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவுக்காக மாணவர்களுக்கு கற்றல் வளநிலையத்தினூடாக கற்றலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஆழமான ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்காக அஹதிய்யா பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது.
- வாசிப்பு மூலம் அறிவை பெருக்குவதற்காக வெடா வாசிகசாலையும் நூல் நிலையமும் நிருவப்பட்டது.
- அறிவார்நந்த பிள்ளை வளர்ப்பை ஏற்படுத்துவதற்காக பெற்றார்களுக்கான கருத்தரங்குத் தொடர் நடத்தப்படுகின்றது.
- திறன்களை ஊக்குவித்து விருத்தி செய்வதற்காக வருடாந்த பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது.
இதனோடு இணைந்ததாக பின்வரும் விடயங்கலும் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
- ஷஹ்ருல் குர்ஆன் போட்டிகள் – பிரதி ரமழான் மாதம் தோறும்.
- அந்நாஸிரூன் பயிற்றுவிப்பு – பழைய மாணவர்களுக்கான வழிகாட்டல் வேலைத்திட்டம்.
- ஊர் மக்களுக்கான வருடாந்த களப்பயணம்.
- தவணை தோறும் மாணவர்களுக்கான மாணவர் மன்ற கலை நிகழ்ச்சிகள்.
- வாசிப்பு மாதப் போட்டி நிகழ்ச்சிகள்.
- கணனி வகுப்புகள்.
2019 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோணா நோய் என்பவற்றால் சங்கத்தின் வேலைத்திட்டங்கள் மந்தகதி அடைந்தன.
2022 ஆம் ஆண்டு முதல் உபதலைவர் A.R.M முஸம்மில் ஆசிரியரின் இராஐனாமாவைத் தொடர்ந்து M.J.M ஜெஸீம் ஆசிரியர் உபதலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றது.
சங்கத்தின் போஷகரான அல்ஹாஜ் T.M முத்தலிப் (முன்னால் மாகாண சபை உறுப்பினர்) அவர்களின் நிதி உதவியில் மத்ரஸா மண்டபத்தின் மூன்றாம் மாடி கட்டப்பட்டது.
ஜனாப் A.U.M முபஸ்ஸிர் அவர்களினால் கணனிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
அல்ஹாஜ் M.J.M பாரூக் (பாரூக் பிரதர்ஸ் – கண்டி) அவர்களினால் வாசிகசாலைக்கான கதிரை, மேசைகள் அலுமாரிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன. பின்னர் ஜனாப் M.W.M நுஸ்ரத் அவர்களின் முயற்சியால் மேலும் மேசை, கதிரைகள் பெற்றுத்தரப்பட்டன.
ஹாஜியானி நாகூர் உம்மா காதர் அவர்களினால் மாணவர்களுக்கான சீருடை அன்பளிப்பு செய்யப்பட்டது.
சுமார் 200 மாணவர்கள் அளவில் கல்வி கற்கும் கிராமமான வனஹபுவ கிராமத்தை அறிவு ரீதியாக முன்னேற்றும் பணியில், வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் செயற்பட்டு வருகின்றது.;