“வெடா”வின் நிரந்தர வருமானத் திட்டம்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடியார்களே, மதிப்புக்குரிய பெரியார்களே, அன்புச் சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சுமார் 250 சந்தாதாரிகளைக் கொண்ட வனஹபுவ கிராமத்திற்கு கல்விப்பணி ஆற்றுவதற்காக ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட, வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் – Wanahapuwa Educational Development Association – WEDA தனது பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதில் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்கின்றது.
எனவே, சங்கத்திற்கான ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பலரும் முன்வைத்த ஆலோசனைக்கிணங்க இவ்வருடம் அதனைச் செயற்படுத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் தலைவராக ஜனாப் AHM ரினாஸ் அவர்களும், செயலாளராக ஜனாப் MJM ஜெஸீம் ஆசிரியர் (வெடா சங்கத்தின் உபதலைவர்) அவர்களும், பொருளாளராக அல்ஹாஜ் AM நிஸ்பா அவர்களும் இயங்குவதுடன் ஜனாப் SM நியாஸ், ஜனாப் AM பாரூக் (மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர்) ஆகியோரும் அக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
அக்குழு ஐம்பது இலட்சம் ரூபாவை முதலீட்டுக்கான தொகையாக இலக்கு வைத்து தன் உழைப்பை முன்னெடுக்கவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
அறிமுகம்
வனஹபுவ ஆரம்பிக்கப்பட்டது. 2015 கல்வி அபிவிருத்திச் சங்கம் ஆம் ஆண்டு
அது, “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்ற தூர நோக்கைக் கொண்டு ஐந்து நோக்கக் கூற்றுக்களை உள்ளடக்கி தனது சேவையைச் செய்துவருகின்றது.
அந்த வகையில் ‘பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு’ என்ற திட்டத்தின் கீழ் தரம் 3 11 வரையான மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புகளை நடத்தி வருகின்றது.
‘அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு’ என்ற திட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கான மாதாந்த நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வழிகாட்டல் கருத்தரங்குகள்
“ஆழமான ஆன்மிக உணர்வு ‘ என்ற வேலைத் திட்டத்திற்கமைய பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் அஹதிய்யா செயற்படுத்தப்படுகின்றது. பாடசாலைத் திட்டம்
அவ்வாறே, ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் வெடாவின் வாசிகசாலையும் புத்தக விற்பனை நிலையமும் இயங்கி வருகின்றது.
‘திறன் விருத்தியும் ஊக்குவிப்பும்’ என்ற ஐந்தாவது நோக்கக்கூற்றிற்கிணங்க வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றுவருகின்றது.
இவற்றைச் செய்துகொண்டு செல்வதில் மாதாந்தம் பெரும் செலவு காணப்படுகின்றது. அவ்வாறே, வருடாந்த பரிசளிப்பு விழா, ஷஹ்ருல் குர்ஆன், களப்பயணம் போன்றவற்றுக்கும் பெருந் தொகைப் பணம் தேவைப்படுகின்றது.
எனினும், வெடாவின் இவ்வேலைத் திட்டங்களுக்கு எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை. நன்கொடையாளர்களின் நன்கொடையை நம்பியே இவற்றைச் செய்துகொண்டு செல்ல வேண்டியுள்ளது. மட்டும் நம்பியே இவற்றைச் செய்துகொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதில் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிரமங்களை உணர்ந்த வெடா சங்கம் தனக்கென ஒரு நிரந்தர வருமான வழியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தது.
செலவினங்கள்
வெடா சங்கத்திறகான வருடாந்த செலவினங்கள் பின்வருமாறு அமைகின்றன.
முதலீடு
சேகரிக்கப்பட்ட நிதியை எதில் முதலீடு செய்வது என்பது பற்றிய தீர்மானம் நிதி சேகரிப்பு வேலைகள் நிறைவு பெற்றதன் பின்னர் எடுக்கப்படும். தற்போது அதற்கான சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1.வாகனம் ஒன்று வாங்குதல்.
2. முதலாளிமார்களின் வியாபாரத்தில் பங்குதாரர்களாகுதல்.
3. கடை அல்லது வீடு கொள்வனவு செய்து வாடகைக்கு விடுதல்.
4. திருமண மண்டபம் கட்டுதல்.
5. வருமானம் தரும் காணியைன்றைக் கொள்வனவு செய்தல்.
6. இஸ்லாமிய சேமிப்பு முறையில் வங்கியில் வைப்பிலிடல்.
வேண்டுகோள்
வெடா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவு பெற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில், சங்கத்தின் செயற் திட்டங்களைச் சிறப்பாக நடத்திச் செல்வதற்கு இந்த நிரந்தர வருமானத் திட்டம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
எனவே, சதகதுல் ஜாரியாவாக அமையும் இத்திட்டத்தில் தங்களையும் இணைந்து கொள்ளுமாறு அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம்.
அல்லாஹ் எங்களையும் உங்களையும் நேர்வழியில் செலுத்துவானாக. மேலும், அல்லாஹ் உங்கள் செல்வத்திலும் ஆரோக்கியத்திலும் குடும்பத்திலும் பரகத் செய்வானாக. மறுமையில் மேலான ஜன்னதுல் பிர்தௌசைத் தந்தருள்வானாக.
“அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களை செலவு செய்வோருக்கான உதாரணம் ஒரு வித்தைப் போன்றது. அது ஏழு கதிர்களை முளைப்பித்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரு மடங்காக்குகிறான். அல்லாஹ் மிக்க விசாலமானவன். யாவற்றையும் அறிகிறவன்” (அல்பகரா 263)
யாஅல்லாஹ்! ‘வெடா’ சங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு உதவும் நல்லோருக்கு அவர்களின் செல்வங்களை மேலும் பன்மடங்காக்கிக் கொடுத்தருள்வாயாக. மறுமையில் அவர்களை உயர் சுவர்க்கத்தில் வாழச் செய்வாயாக.