வனஹபுவ பிரதேச மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற WEDA ICT Unit பிரிவிற்கு ஆரம்ப கட்டமாக 3 கணிணிகள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நன்கொடையை கொழும்பிலுள்ள Centrum Mart உரிமையாளர் சகோதர்ர் முபஷ்ஷிர் அவர்களின் குடும்பத்தினரின் அனுசரனையில் கிடைக்கப்பெற்றதோடு அதனை வெடா அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக 6.8.22 அன்று கையளிக்கப்பட்டது.
அத்தோடு இந்நிகழ்வில் இன்னும் 7 கணிணிகள் தருவதற்கும் அவர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது.
எமதூரின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்பு நல்கும் எமதூரை சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் அவர்களின் மகன் சகோதர்ர் முபஷ்ஷிர், அன்னாரின் மனைவி ஹாஜியானி ஹரீஸா மற்றும் அமேரிக்காவில் வசிக்கக்கூடிய அன்னாரது மகள் சகோதரி மாஜிதா ஆகியோருக்கு வெடா நிர்வாகம் சார்பாகவும் வனஹபுவ ஜமாஅத்தினர் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அல்லாஹுத்தாலா அவர்களின் இந்த ஸதகாவை அங்கீகரித்து அவர்களது தனிப்பட்ட, சமூக மற்றும் பொருளாதரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த வல்லோனை இறைஞ்சுகிறோம்.