வருகிறது, ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்).
ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வரும் போதெல்லாம் ‘நோன்பு மாதம் வருகிறது’ என்றே கூறியும், நோன்புக்கான தயாரிப்புகளைச் செய்தும், நோன்பு நோற்றும் இன்னும் பல இபாதத்துகளில் ஈடுபட்டும் அப்புனித மாதத்தை வழியனுப்பப் பழகிப்போயுள்ளோம்.
இதனால், ரமழான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்கிறோம் என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். அன்றியும், நோன்பின் மாண்பு பற்றிப் பேசப்படுமளவு ரமழானில் நோன்பு நோற்பதன் அடிப்படை நோக்கம் பற்றிப் பேசப்படுவதோ, செயற்படத் தூண்டப்படுவதோ, அரிதாகவே காணப்படுகிறது. செயற்படுவதோ
ரமழான் மாதம் நோன்பு மாதமல்ல!
அம்மாதத்தில் நோன்பு நோற்பது, நாம் எமது எண்ணங்களை, செயல்களை, நடத்தைகளை, நடவடிக்கைகளை ஒரு முக்கிய விடயத்தின்பால் குவிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். இதனை அல்லாஹு தஆலா இப்படித் தெளிவுபடுத்துகிறான்.
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்கட்டும்…” (2:185)
இங்கு ரமழானில் நோன்பு நோற்பதன் நோக்கத்தை அல்லாஹ் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறான்.
நோக்கம் இதுதான்:
ரமழான் மாதத்தில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது. அதனை நினைவு கூருமுகமாக, அதற்கு சங்கை செய்யும் வகையில்தான் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டுமென அல்லாஹ் கூறுகிறான்.
நோக்கத்தை விளங்கி செய்வோம்! கடமையைச்செய்வோம்!
எனவே, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை. ஆனால், நோன்பு நோற்பதனால் மட்டும் நோக்கம் நிறைவேறி விடுமா? அல்குர்ஆனின் பால் எமது கவனம் அல்குர்ஆனுக்குரிய குவிக்கப்படவேண்டும். கடமைகளை நிறைவேற்றுவதற்காக ரமழானில் அதற்கென விஷேடமான திட்டம் வகுத்துச் செயற்பட வேண்டும்.
அல்குர்ஆன் என்பது,
- எமக்கு உயிர்.
- எமது வாழ்க்கைப் பாதையை தெளிவாக்கிக் காட்டும் ஒளி.
- பாக்கியங்கள் நிறைந்த இறைவேதம்.
- எமது இரட்சகனிடமிருந்து வந்துள்ள உபதேசம்.
- இதயங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடிய நிவாரணம்.
இத்தகையதொரு வேதப் புத்தகத்திலிருந்து தூர விலகி நின்றுக் கொண்டு ரமழானில் நோன்பு நோற்பதால் மட்டும் ஷஹ்ருல் குர்ஆன் எனும் குர்ஆனிய மாதத்திற்குரிய கடமையை நிறைவேற்றியவர்களாக நாம் ஆகிவிட முடியுமா?
அல்குர்ஆனை விளங்க முன்வருவோம்
ஏனெனில், அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் தனது அருள்களை முழுமைப்படுத்தியுள்ளான். அதனை எமக்கு நேர்வழியாகவும், ஒளியாகவும், உபதேசமாகவும், இதய நோய்களுக்கு நிவாரணமாகவும், வேறு சமூகங்களுக்கில்லாத பெரும் பாக்கியமாகவும் வழங்கி பல வழிகளில் எமக்கு அருள்புரிந்துள்ளான். இந்த அருளைச் சுமந்த நாம் மனித சமூகத்திற்கு அதனை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கிறோம். சுமத்தப்பட்டவர்களாகவும்
எனினும், அதனை விளங்கி அந்த அருள்களைப் பெற்றுக்கொள்ள நாம் தயாரில்லாத போது எமது நிலையைப் பற்றி என்ன சொல்வது? எனவே, எமது வாழ்க்கையின் வெற்றிக்காகவும், மறுமை வரை இறைதூதின் இருப்புக்காகவும் நாம் ஆற்ற வேண்டிய பணியை பற்றி மீள்பரிசீலனை செய்வதற்காக அல்லாஹ், வருடம்தோறும் ஒரு மாதத்தையே அதற்கென ஒதுக்கியுள்ளதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டுமல்லவா?
பிரபஞ்சத் தலைவனான இறைவனின், ஏனைய வேதங்கள் போல எவ்வித திரிபுக்கும் உட்படுத்தப்படாத ஒரு மகத்தான நூலே அல்குர்ஆன். இதில் எவ்வித தவறுகளோ, குறைகளோ, சந்தேகங்களோ கிடையாது. இப்படியான ஒரு நூலை நாம் பெற்றிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அதை வைத்திருக்கும் சமூகம் எவ்வளவு பெருமையைச் சுமந்துள்ளது! ஆனால், துரதிஸ்டம் என்னவென்றால் அம் மகத்தான நூலைச் சுமந்திருக்கும் சமூகத்திற்கு அப்புத்தகம் கூறும் செய்தி தெரியாது. அதனை இமாமாகக் கொண்டு வாழத் தெரியாது என்பதேயாகும். இதனை மேலும் மேலும் தொடரவிடுவது புத்திசாலிதனமாகுமா? குர்ஆனின் மாதத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்
அவ்வகையில், ரமழான் மாதத்தை நாம். ‘ஷஹ்ருல் குர்ஆன்” (குர்ஆனுக்குரிய மாதம் )எனப் பிரபல்யப்படுத்த வேண்டும். இம்மாதத்தில் குர்ஆனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுகூர வேண்டும். இதற்காக பாடசாலைகள், கிராமங்கள் தோறும் பாதாகைகள் தொங்கவிடப் படலாம். துண்டுபிரசுரங்கள் வெளியிடப் படலாம். தொடர்புசாதனங்கள் மூலம் நினைவூட்டல்கள் செய்யலாம்.போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மக்கள் கவனத்தை ஈர்க்கலாம்.