பிள்ளைகளின் முதலாவது ஆசிரியர்கள் பெற்றோர்களாவர். அவர்கள் பெற்றோரியம் பற்றிய அறிவு பெற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதனால், பெற்றோர்களை அறிவூட்டி வலுவூட்டும் மாதாந்த கருத்தரங்கு, “அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு” எனும் பெயரில் நடத்தப்படுகிறது. இது மாணவர்களின் எதிர்கால தலைமை பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும். இந்நிகழ்ச்சி இலங்கையின் அஹதிய்யா சம்மேளத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி செயல்படுகிறது.