“வாசிப்பை நேசிப்போம்” திட்டத்தின் கீழ், “வாசிகசாலையும் விற்பனை நிலையமும்” என்ற பெயரில் ஒரு வாசிகசாலை செயல்படுகிறது. இதில் சுமார் ஆயிரம் புத்தகங்களும், தினசரி பத்திரிகைகள், வாராந்த மற்றும் மாதாந்த சஞ்சிகைகளும் உள்ளன. எல்லா வயதினரும் இந்த வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். அங்கத்துவம் பெற்றவர்கள் புத்தகங்களை இரவல் எடுக்கவும், புத்தகங்களை கொள்வனவு செய்யவும் முடியும். புத்தகங்கள் குறிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. நூலகர் தினமும் இரண்டு மணித்தியாலங்கள் வாசிகசாலையை திறக்கின்றார். வருடாந்தம் போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன.