
பிள்ளைகளின் முதலாவது ஆசிரியர்கள் பெற்றோர்களாவர். அவர்கள் பெற்றோரியம் பற்றிய அறிவு பெற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்க்கின்ற போதுதான் எதிர்க்கால சமூக அங்கத்தவர்களை ஆளுமை நிறைந்தவர்களாக உருவாக்க முடியும். அவ்வகையில், பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக பெற்றோர்களை அறிவூட்டி வலுவூட்டும் மாதாந்த கருத்தரங்கு, “அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு ” என்ற மகுடத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகின்றது.